Last Updated : 24 Dec, 2024 03:16 AM

 

Published : 24 Dec 2024 03:16 AM
Last Updated : 24 Dec 2024 03:16 AM

Amazed, amassed என்ன வேறுபாடு? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 111

Amazed என்பது ‘பெரிதும் வியப்படைந்த’ என்பதைக் குறிக்கிறது. He was amazed by her brilliance. Amassed என்பது ஒரு பொருளைப் பெருமளவில் திரட்டியதைக் குறிக்கிறது. She has amassed a huge fortune from her novels.

பொருள் மட்டுமல்ல தகவல்களை எக்கச்சக்கமாகத் திரட்டுவதையும் amassed என்ற சொல் குறிக்கிறது. She amassed a lot of information, by collecting it over five years.

****

Trivia என்பதை சாரமற்ற தகவல்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். Musings என்பதும் trivia என்பதும் ஒன்றா? Muse என்பதும் amuse என்பதும் தொடர்புள்ள சொற்களா? Trivia என்பதும் musing என்பதும் ஒன்று அல்ல. இவற்றை நேரெதிர் அர்த்தம் கொண்டவை என்றுகூட சொல்லலாம்.

Muse என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததுதான் musing. Muse செய்வது என்றால் ஒன்றை ஆழமாகவும் கவனமாகவும் யோசிப்பது என்று பொருள். He mused on resigning his job. I began to muse about starting my own business.

Amuse என்பது வேறு. வேடிக்கையான ஒன்றைச் செய்து பிறரை சிரிக்க வைப்பது அல்லது மகிழ்விப்பதை amuse என்பார்கள். His humour amused me. These stories are meant to amuse. சலிப்படையாமல் இருப்பதற்காக ஒன்றைச் செய்வதையும் amuse என்ற சொல்லின் மூலம் குறிப்பிடு வார்கள். I did some sudoku exercises to amuse myself during the long train journey.

****

Platform என்பது ரயில்வே நிலையத்தில் உள்ள தண்டவாளங்கள் தானே? அப்படி இருக்க This is a good platform for you என்று ஒருவர் என்னிடம் கூறினார். எதனால்? ’கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில் மூன்றாவது பிளாட்பாரத்துக்கு வந்துசேரும்’ என்பதுபோல் கேட்டு பழகியதால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கிறது. Platform என்பது அங்குள்ள உயர்த்தப்பட்ட நடைமேடையை குறிக்கிறது. எனவே ‘கன்னியாகுமரிக்குச் செல்லும் ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தை ஒட்டி வந்துசேரும்’ என்று அறிவிப்பை மாற்றி இருந்தால் உங்களுக்கு குழப்பம் வந்திருக்காது.

சாலைகளில்கூட பாதசாரி களுக்கான platform என்பது சற்றே உயர்த்தப்பட்டிருக்கும். உரைகள் நிகழ்த்துவதற்காக உயர்த்தப் பட்டிருக்கும் பகுதியையும் இந்தச் சொல்லால் குறிப்பிடுவார்கள். தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதையும் platform என்பார்கள். They campaigned on a platform of social justice.

ஏதோ ஒரு வாய்ப்பைக் குறிப்பிட்டு விட்டு, அது உங்களுக்கானது, அது உங்களை உயர்த்தும் எனும் அர்த்தத்தில் This is a good platform for you என்று உங்கள் நண்பர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x