Published : 29 Oct 2024 06:16 AM
Last Updated : 29 Oct 2024 06:16 AM
ஸ்காலர்ஷிப் என்பது தகுதிசார் கல்வி உதவித்தொகை. தேர்வில் தேர்ச்சி அடைந்த ஒருவருக்கு கல்விச் செலவுக்காக வழங்கப்படும் நிதி. Fellowship என்பது பெரும்பாலும் பல்கலைக்கழக கல்வி சார்ந்த ஆராய்ச்சி களுக்காக வழங்கப்படும் நிதி உதவி.
Anyways என்று சொல்லை இப்போது சிலர் பயன்படுத்துகிறார்களே, அது சரியா? - இருந்தாலும், என்றபோதிலும் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கக் கூடிய சொல் anyway. சில சமயம் இரண்டு தொடர்பில்லாத விஷயங்களை இணைப் பதற்கான சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. (‘நம் வீட்டு எருமை மாடு கன்று போட்டது. நிற்க. நீ அங்கே எப்படி இருக்கிறாய்?’ என்ற கடித வாக்கியங்களில் உள்ள ‘நிற்க’ என்ற பயன்பாடு போல)
Anyway என்ற சொல்லை anyways என்ற அதே பொருளில் சிலர் இப்போது பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், இதை அகராதிகள் ஏற்பதில்லை. ஆங்கில அறிஞர்களும் தவறு என்கிறார்கள்.
Benign cancer என்பது என்ன வகைப்புற்றுநோய்? - அப்படி ஏதாவது புற்றுநோய் இருந்தால் அது புற்று நோயே அல்ல!
Benign என்றால் கனிவான என்று பொருள் உண்டு. A benign smile என்றால் கனிவான புன்னகை. His humor was benign என்றால் அவரது நகைச்சுவை யாரையும் புண்படுத்துவதாக இருக்காது.
மருத்துவத்தைப் பொறுத்தவரை benign என்பதற்கு ஆபத்தில்லாத என்று அர்த்தம். Benign tumor என்றால் அது ஆபத்தில்லாத கட்டி. அதாவது அது வேறு இடத்துக்குப் பரவாது. ஆனால் malignant tumor என்பது உடலின் பிற இடங்களுக்கும் பரவக்கூடிய கட்டி. அதாவது புற்றுநோய்.
ஆக benign tumor இருக்கலாம். Benign cancer இருக்காது.
Chime என்பது எதைக் குறிக்கிறது? - அதிர்வொலி. பெரும்பாலும் இனிமையான ஒலி. Chime bells என்பவை இயக்கப்படும்போது சிறிதும் நாராசமற்ற ஒலியை வழங்கும்.
Chime in என்ற பயன்பாடும் உண்டு. ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கிடுவதை அது குறிக்கிறது. அது விவாதமாகவோ, எதிர்க்கருத்து கூறுவதாகவோ இருக்காது. அதாவது காதுக்கு இனிமையாக ஒலிக்கும் ஜால்ரா ஒலி!
‘என் தீர்ப்பை இப்ப நான் சொல்லப் போறேன்’ என்று தொடங்கும்போது, ‘உங்க தீர்ப்புக்கு மறுபேச்சு உண்டா?’ என்று ஒருவர் குறுக்கிட்டால், he chimed in.
‘He could not have committed the crime’, I said. ‘Impossible for him to have committed the crime’, she chimed in.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT