Published : 08 Oct 2024 06:06 AM
Last Updated : 08 Oct 2024 06:06 AM
சிலிக்கான் என்பது மண்தானே? அப்படி இருக்க மின்னணுப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற பகுதியை silicon valley என்று கூறுவது ஏன்? - சிலிக்கான் என்பது ஒரு ரசாயனபொருள். இது மின்னணுப் பொருட்களில் நிறையப் பயன்படுகிறது. முக்கியமாக செமிகண்டக்டர் எனும் பாகத்துக்கு இது தேவை.
சிலிக்கா என்பதுதான் மண். இது சிலிக்கான் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்று. அதாவது சிலிக்கானும் ஆக்சிஜனும் குறிப்பிட்டவிகிதத்தில் கலந்து உருவாவது.இதுவும் கண்ணாடி தயாரிப்பு, பெயிண்ட், பிளாஸ்டிக், ரப்பர்போன்ற பல பொருட்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
Grand, grandeur, grandiose ஆகிய சொற்கள் ஒரே அர்த்தம் கொண்டவையா? - Grandeur என்பது அசாதாரணமான, மனதைக் கவரும் தன்மைகொண்ட பொருள்களை விவரிக்கப்பயன்படுகிறது. அது பிரம்மாண்டமானதாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
Grand என்பது கோலாகலமான, பெரிய அளவிலான என்பதைக் குறிக்கிறது. Grandiose என்பதையும் இதன் சம வார்த்தை என்றுகூறலாம்தான். ஆனால், நடைமுறையில் grandiose என்பதைத் தேவையற்ற ஆடம்பரத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.
Vandalism என்பது அடாவடித்தனமாக நடந்து கொள்வதைக் குறிக்கிறதா? - ஏதாவது பொருளை (பெரும்பாலும் பொதுச்சொத்தை) அழிக்கும் செயலில் ஈடுபடுவதை vandalism என்பார்கள். Hooliganism என்றும்இதைக் கூறலாம்.
Distal end என்பது என்ன? - ஒரு பொருள் எந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறதோ அதிலிருந்து மிக அதிக தூரத்தில்காணப்படும் மற்றொரு பொருளைக்குறிக்கும் சொல். தோளைப் பொறுத்தவரை விரல்கள் அதன் distal end-ல்உள்ளன. தோளோடு ஒட்டியிருக்கும் கை proximal endல் உள்ளது.
Overtone என்பது ஒன்றை உரத்துக் கூறுவதா? - மாறாக, அது வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாகக் கூறப்படும்ஒன்று! நுட்பமாக வெளிப்படுத்துதல்.
People of the region reported an incident. But it had political overtones. All the issues were not religious, though they had religious overtones at times.
கனம் கோர்ட்டார் அவர்களே என்பதில் கனம் என்பதன் ஆங்கில வடிவம் எது? - Honourable.
ஷேக்ஸ்பியர் எழுதிய TwelfthNight என்று தவறாகக் குறிப்பிட்டுஇருக்கிறதே? - Twelfth என்பது சரியான சொல்தான். அதில் f என்பது மெளன எழுத்து.
கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ நூலாசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT