Last Updated : 01 Oct, 2024 06:00 AM

 

Published : 01 Oct 2024 06:00 AM
Last Updated : 01 Oct 2024 06:00 AM

ஒருவர் limelight-ல் இருக்கிறார் என்றால் என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 99

அவர் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. Lime என்பது, முக்கியமாக கால்சியம் ஆக்சைடு அடங்கிய, ஒரு ரசாயன பொருள். இதை வெப்பப்படுத்துவதால் அதீத வெள்ளை ஒளி உருவாகும்.

1820 களில் limelight என்பது கலங்கரை விளக்கங்களிலும் நாடக அரங்குகளிலும் முதலில் பயன்படுத்தப்பட்டது. மேடையில் பலர் இருந்தாலும் ஒருவர் மீது மட்டும் பளிச்சென்று ஒளிவெள்ளம் (limelight) பாய்ந்தால் அவர் (அப்போது) கவனத்துக்குரியவர். இந்த இடத்தில் lime juice என்று குடிக்கிறோமே, அப்படியானால் lime என்பது எலுமிச்சம்பழம் இல்லையா என்று கேள்வி எழலாம். Lime என்பது எலுமிச்சம்பழத்தையும் குறிக்கும்தான். அது lemon என்பதிலிருந்து வேறுபட்டது. Lime என்பது சற்றே சிறிய பச்சையாக, கோள வடிவில் காட்சியளிக்கும் எலுமிச்சம்பழம். Lemon என்பது கொஞ்சம் பெரியது மஞ்சள் நிறத்தில், ஓவல் வடிவில் காட்சியளிப்பது. இரண்டும் பெரும்பாலும் ஒரேவித சத்துக்களைக் கொண்டவை. என்ன, lemon இனிப்பாக இருக்கும்.

உப்புத் தண்ணீரை தொண்டையில் கொப்பளிப்பதை காகுள் செய்வது என்பார்கள். இதன் ஆங்கிலஎழுத்துக்கள் என்ன? - Gargle. வியப்பில் விழிகள் விரியப் பார்ப்பதை goggle என்பார்கள். He goggled in total disbelief. குளிர் கண்ணாடிகளை goggles என்பதுண்டு.

Elope என்றால் ஒரு பெண் ஒருவனோடு ரகசியமாக ‘ஓடிப்போவது’ என்று அறிந்திருக்கிறேன். ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்த வார்த் தையைப் பயன்படுத்தலாமா? - கூடாது. பெற்றோரின் அனுமதியின்றி ரகசிய திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறுவதைத்தான் elope என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுவார்கள். இருவரும் வெளியேறினாலும் பெண்ணை மட்டுமே ‘ஓடிப்போயிட்டா’ என்று குறிப்பிடுவது என்ன நியாயமோ? ஆங்கிலத்தில் He eloped with her, She eloped with him என்று இரு விதமாகவும் குறிப்பிடுகிறார்கள்.

இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என்பதை enough என்ற ஒரே சொல்லின் மூலம் உணர்த்தலாமா? - விரல்களை விரித்தபடி கையை உயர்த்தியபடி enough என்று கர்ஜிப்பதன் மூலம் உணர்த்தலாம். அல்லது Don’t speak a word beyond this என்று கூறலாம்.

தமிழில் எத்தனாவது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு இணையாக ஆங்கிலத்தில் சொற்கள் உள்ளதா? - நேரடியான சொல் இருப்பதாகத் தெரியவில்லை. What order அல்லது what rank என்று பயன்படுத்தலாம். நீ எத்தனையாவது குழந்தை என்பதை ஆங்கிலத்தில் What is your birth order என்று கேட்கலாம். அப்படிக் கேட்பது விசித்திர மாகப்பட்டால் Are you the first child or second child to your parents? என்று கேட்கலாம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x