Last Updated : 17 Sep, 2024 06:10 AM

 

Published : 17 Sep 2024 06:10 AM
Last Updated : 17 Sep 2024 06:10 AM

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 97: ராப்போர்ட் என்பது என்ன?

நீங்கள் rapport என்ற சொல்லைக் குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன். இரு நபர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள். அவர்களிடையே தகவல் தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் நன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் அவர்களுக்கிடையே நல்ல rapport இருக்கிறது என்று பொருள்.

இது காதலர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. மருத்துவர்-நோயாளி, முதலாளி-தொழிலாளி போன்றவர்களிடமும் இருக்கலாம். Rapport என்ற சொல்லை ‘ராப்போர்’ என்று உச்சரிக்க வேண்டும்.

Multiplex என்பது பிரம்மாண்ட கட்டடத்தைக் குறிக்கிறதா? - அது மட்டுமல்ல. அதில் முழுவதுமாக அல்லது பெரும்பாலும் வணிக நிறுவனங்களாக இருக்க வேண்டும். தவிர அதில் குறைந்த பட்சம் ஒரு திரையரங்காவது இருக்க வேண்டும்.

‘I will not press charges against you’ என்றால் என்ன அர்த்தம்? - ‘காவல் துறையில் உன்மீது புகார் கொடுக்கமாட்டேன்’ என்பது பொதுவான அர்த்தம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ‘the charges will not be pressed’ என்றால் அந்த வழக்கு அதோடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இரு தரப்பும் ஒரு முடிவை எட்டிவிட்டார்கள் என்றாலோ, குற்றம் சுமத்தியவர் இறந்துவிட்டார் போன்ற காரணங்களினாலோ, ஏதோ தவறான புரிதலால் வழக்குத் தொடுக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்தாலோ ‘the charges will not be pressed’.

‘Naval, Navel என்ற இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?’ - ‘தொப்புளை ஆங்கிலத்தில் எப்படி குறிப்பிடுவார்கள்?’ - இந்த இரு வாசகர்கள் எழுப்பியுள்ளதும் தொடர்புடைய கேள்விகள்தான். Naval என்பது ஒரு நாட்டின் கடற்படை தொடர்பானது. Adjective ஆக இது பயன்படுத்தப்படும். Navel என்பது noun. தொப்புள் கொடியை (umblical cord) அறுத்த பிறகு அங்குள்ள சிறிய வட்டமான சற்றே உள்ளடங்கிய பகுதியை (தொப்புளை) இந்த சொல்லால் குறிப்பிடுவார்கள். இதை belly button, tummy button என்றும் செல்லமாகக் குறிப்பிடுவதுண்டு

ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் அடிக்கடிக் காணப்படும் turf என்ற சொல்லுக்கு என்ன பொருள்? - புற்கள், சேறு போன்றவற்றை மண்ணின் மேற்பரப்பில் காணலாம். அந்த பரப்பைத்தான் turf என்கின்றனர். ஹாக்கி விளையாட்டு ஆடப்படும் செயற்கைப் புல்வெளியை artificial turf என்பார்கள்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x