Published : 28 Nov 2023 04:25 AM
Last Updated : 28 Nov 2023 04:25 AM

கொஞ்சம் technique கொஞ்சம் English 250: Confusing words - பிறகு பார்க்கலாம்

இனியன்: Hello Mithran, தீவிரமா அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்குற

மித்ரன்: இரண்டு vowels க்கு நடுவில் consonant வரும் போது, அந்த consonant எழுத்தை இரண்டு தடவை எழுதணும்னு எங்கேயோ படிச்சேன்.

உமையாள்: சரி, இருக்கலாம். இப்போ அதை வச்சு என்ன ஆச்சு உனக்கு?

மித்ரன்: இங்கே Later ன்னு எழுதியிருக்குதே. ஏன் Latter ன்னு எழுதவில்லை ன்னு பார்த்துட்டு இருக்கிறேன்.

பாட்டி: முழு வாக்கியத்தையும் சொல்லுறியா மித்ரன்?

மித்ரன்: I will see you later. (நான் உங்களை பிறகு சந்திப்பேன்.)

பாட்டி: சரியாகத் தானே இருக்குது.

உமையாள்: எப்படி இது சரின்னு சொல்லிக் கொடுக்கிறீங்களா பாட்டி.

பாட்டி: Later, Latter இரண்டுமே தனித்தனி வார்த்தைகள்.

இசை: ஓ, இரண்டுமே இருக்குதா!

பாட்டி: Later என்பது எதிர்காலத்தில் உள்ள ஒரு நேரத்தைக் குறிக்கும்.

இசை: அதாவது Future tense.

பாட்டி: Latter என்பது, இரண்டு விஷயங்கள் இருக்கும் போது, இரண்டாவதை அதாவது பிந்தையதை குறிக்கும்.

உமையாள்: அதாவது second option.

பாட்டி: She has two books and I prefer the latter. (அவளிடம் இரண்டு புத்தகங்கள் உள்ளன, நான் இரண்டாவது புத்தகத்தை விரும்புகிறேன்.)

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x