Published : 25 Feb 2020 09:55 AM
Last Updated : 25 Feb 2020 09:55 AM
அன்பு மாணவர்களே...
நாம் ஒரு மரம் விழுந்தால் பதறுகிறோம். ஒரு எறும்பு தண்ணீரில் விழுந்தால் துடிக்கிறோம். ஆனால் சக மனிதனிடம் மட்டும் வெறுப்பை உமிழ்கிறோமே ஏன்? சிறு அன்பை பகிர்ந்துகொள்ளாமல் அவனது நிறம், உயரம், எடை, உடை என அனைத்தையும் கொண்டு கிண்டல், கேலி, ஏளனம் செய்கிறோமே ஏன்?
இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குதான் என்று சொல்லி சிரித்தபடியே விசமத்தனமான செயல்களில் ஈடுபடுகிறோம். அனைவரும் அறிந்திருப்போம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் குவான்டன் பேலஸ் என்ற 9 வயது சிறுவன் உயரம் குறைவாக இருப்பதால், உடன் பயிலும் மாணவர்கள் ஏளனம் செய்து வரம்புமீறி சென்றுள்ளனர். தன் தாயை பார்த்த மாத்திரத்தில் பீறிட்டு அழுதான் பேலஸ். அதை பார்க்க முடியாமல் தாயும் சேர்ந்து அழுததை உலகமே சமூக வலைதளத்தில் பார்த்தது.
இது உலகம் முழுவதும் நடக்கிறது. ஒருவர் உயரம் அதிகமாகவோ,குறைவாகவோ அல்லது கருப்பு நிறத்திலோ வேறு எந்த வடிவத்தில் இருந்தால் என்ன?
புரிந்துகொள்ளுங்கள், இப்படியே நாம் காலகாலமாக மனிதத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு சிறியவர் பெரியவர் என்றில்லை அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். ஒருவர் சில குறைபாடுகளுடன் இருக்கும் பட்சத்தில் ஒரு சாமான்ய மனிதனாக அவர்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இல்லையென்றால் சரிசமமாக நடத்துவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அனைத்துமே தலைகீழாக உள்ளது. இச்சமூகம் நமக்கு எந்த மாதிரியான படிப்பினையைதான் கற்றுக் கொடுத்துள்ளது. இதுபோன்ற முதிர்ச்சியற்ற செயல்களை பள்ளிப் பருவத்திலிருந்தே களைவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT