Published : 10 Feb 2023 06:08 AM
Last Updated : 10 Feb 2023 06:08 AM
தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் அதேபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள், 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம்,முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT