Published : 06 Feb 2023 06:24 AM
Last Updated : 06 Feb 2023 06:24 AM

டிங்குவிடம் கேளுங்கள் - 25: ஊசி மூலம்தான் மருந்தைச் செலுத்த வேண்டுமா?

தொண்டை அடைப்பான் நோய்க்குப் பள்ளியில் தடுப்பூசி போட்டனர். இதனால் காய்ச்சல் வந்தது. கை வீங்கியது. மருத்துவம் இவ்வளவு முன்னேறிய பிறகும் ஊசி மூலம்தான் மருந்தைச் செலுத்த வேண்டுமா? விழுங்கும் மாத்திரையாகவோ மருந்தாகவோ கொடுக்கக் கூடாதா, டிங்கு?

– ர. அனிருத், 7-ம் வகுப்பு, செண்பகம் மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி.

தடுப்பு மருந்துகள் நோயைத் தாக்கக்கூடிய நுண்ணுயிரி, கொல்லப்பட்ட நுண்ணுயிரி அல்லது நச்சுப் பொருளில் இருந்து பெறப்பட்ட ஒரு பொருளைக் கொண்டதாக இருக்கின்றன. இவை திரவ வடிவில்தான் இருக்கும். மாத்திரை வடிவில் உருவாக்க இயலாது.

தடுப்பூசி மூலம் செலுத்தப்படும் மருந்து உடலுக்குச் செல்லும்போது, அது அந்நியப் பொருளாக அடையாளப் படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பாற்றல் மூலம் அழிக்கப்படுகிறது. அடுத்த முறைஇதே போன்ற கிருமிகள் உள்ளே நுழையும்போது ஏற்கெனவே அழித்ததை நினைவில்கொண்டு, நோய் எதிர்ப்பாற்றல் அழித்துவிடுகிறது.

இதற்காகத்தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி களால் மோசமான நோய்கள் தடுக்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. போலியோ, வயிற்றுப்போக்கு ஆகிய வற்றுக்கு மட்டும் சொட்டு மருந்துகளாகத் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன.

இவற்றை வாய் மூலம் உட்கொள்ள வேண்டும். மற்றநோய்களுக்கு எல்லாம் ஊசிகள் மூலமே மருந்தைச் செலுத்த முடியும். தொண்டைஅடைப்பான் எனப்படும் டிப்தீரியா, மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியநோய். அதனுடன் ஒப்பிடும்போது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் காய்ச்சலோ, வீக்கமோ பெரிய விஷயமில்லைதானே, அனிருத்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x