Published : 09 Dec 2022 06:12 AM
Last Updated : 09 Dec 2022 06:12 AM
ஓசூர்: பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து FIITJEE வழங்கும் ‘வெற்றியின் அறிவியல்’ மற்றும் அறிவியல் விநாடி வினா நிகழ்ச்சி வரும் டிச. 10-ம் தேதி (சனிக்கிழமை) அன்று ஓசூரிலும், டிச. 16 திருச்சியிலும், டிச.17 சேலத்திலும் நடைபெறுகிறது.
ஓசூரில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலுள்ள 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வு நாளை காலை 8.30 மணிக்கு ஓசூர் டாக்டர் எம்.ஜி.ஆர். நகரிலுள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
‘வெற்றியின் அறிவியல்’ மற்றும்அறிவியல் விநாடி வினா எனும் இந்நிகழ்வை அறிவியல் எழுத்தாளரும் டிஆர்டிஓ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு தொடங்கி வைக்கிறார். ஐஐடி – ஜேஇஇ நிபுணரும் மூத்த வேதியியல் பேராசிரியருமான ஆர்.கைலாஷ், ‘வெற்றியின் அறிவியல்’ எனும் தலைப்பில் மாணவர்களிடம் உரையாடவுள்ளார். எக்ஸ் க்யூஸ் ஐடி-யைச் சேர்ந்த ஆர்.அரவிந்த், அறிவியல் விநாடி வினா நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
டிச. 16 - திருச்சி: இந்த அறிவியல் விநாடி வினாநிகழ்ச்சி வரும் டிசம். 16 அன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சியில் நடைபெறவுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 9003128286 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
டிச. 17 - சேலம்: இந்த அறிவியல் விநாடி வினா நிகழ்ச்சி வரும் டிச. 17 அன்று (சனிக்கிழமை) காலை சேலத்தில் நடைபெறவுள்ளது.
பங்கேற்க கட்டணம் கிடையாது: இந்த நிகழ்வில் 6 முதல் 12-ஆம்வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணம்ஏதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/01492 லிங்கில் பதிவுசெய்து கொள்ளவும். ஓசூர் மற்றும் சேலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களுக்கு 9894220609 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT