Published : 11 Nov 2022 06:04 AM
Last Updated : 11 Nov 2022 06:04 AM
மதுரை: இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி இல்லாத கொய்யா விளைவித்த உசிலம்பட்டி பெண் விவசாயிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநரகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி சரஸ்வதியின் அங்ககப் பண்ணையில் விளைந்த கொய்யாக்கனியை பூச்சிக்கொல்லி பகுப்பாய்வுக்குட்படுத்தினர். அதில்பூச்சிக்கொல்லி எதுவும் காணப்படவில்லை என உறுதி செய்யப்பட்டு, இதற்கான ஆய்வு முடிவறிக்கையும் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெண் விவசாயி சரஸ்வதிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT