Published : 09 Nov 2022 06:01 AM
Last Updated : 09 Nov 2022 06:01 AM
ஐக்கூ, கஜல் பிறமொழி இலக்கியங்களை பரப்பியதில் முக்கியமானவர். கவியரங்கக் கவிதைகளால் சிறப்படைந்தவர். சிலேடை வார்த்தைகளால் கேட்போரை கவர்ந்திழுப்பது இவரது பாணி. 1937-ல் நவம்பர் 9-ம் தேதி மதுரையில் பிறந்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். முதல் நூல் "பால்வீதி" கவிதை தொகுப்பு. இவரின் கட்டுரைகள் பல விகடனில் தொடராக வெளிவந்தது. "மின் மினிகளால் ஒரு கடிதம்" இது கஜல் கவிதை தொகுப்பாகும். தமிழக அரசின் பாரதிதாசன், கலைமாமணி விருது பெற்றவர் இவர். "ஆலாபனை" கவிதை தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மக்கள் அனைவராலும் இவர் கவிக்கோ என்று அழைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT