Published : 08 Nov 2022 06:06 AM
Last Updated : 08 Nov 2022 06:06 AM
பெய்ஜிங்: விண்வெளியில் உள்ள சீன விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி அங்கு அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. புவியீர்ப்பு சக்தி இல்லாத சூழலில் குரங்குகள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக புதிதாக ஏவப்பட்டுள்ள தனது டியாங்காங் விண்வெளி நிலையத் திற்கு குரங்குகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
சீன விண்வெளி நிலையத்திற் கான அறிவியல் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சீன விஞ்ஞானி ஜாங் லு என்பவர் கூறிய தகவலை சீனாவில் இருந்து வெளியாகும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் ஜாங் லு கூறியிருப்பதாவது: விண்வெளி நிலையத்தின் மிகப்பெரிய தொகுதியில் குரங்குகளை அனுப்பி சோதனை நடத்தப்படும். இது முக்கியமாக மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூறுகளைத் தெரிந்துகொள்ள உதவும். மீன் மற்றும் நத்தைகள் போன்ற சிறிய உயிரினங்களை சோதனை செய்த பிறகு, எலிகள் மற்றும் குரங்குகளை சம்பந்தப்பட்ட சில ஆய்வுகளுக்காக விண்வெளிக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் அவை எவ்வாறு வளர்கின்றன அல்லது இனப்பெருக்கம் செய்கின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி நீண்ட காலக் குடியேற்றத்திற்கு பல நாடுகள் திட்டமிட்டுள்ளதால், இந்த சோதனைகள் அவசியமானதாகிறது. புவியீர்ப்பு சக்தி இல்லாத நிலை, பிற விண்வெளி சூழல்களுக்கு ஒரு உயிரினத்தின் தழுவல் பற்றிய புரிதலை மேம்படுத்த இந்த சோதனைகள் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT