Published : 02 Nov 2022 06:08 AM
Last Updated : 02 Nov 2022 06:08 AM
சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழக்கழகமான இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஜூலை 2022 பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ம்தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடைசி தேதியை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நவம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம். எனினும் இந்த காலநீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது, என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT