Published : 20 Oct 2022 06:10 AM
Last Updated : 20 Oct 2022 06:10 AM
பாட்டி: Adjective-ன்னா noun அல்லது pronoun-க்கு additional information கொடுக்குறதுக்காக பயன்படுத்துறதுன்னு நேத்து பார்த்தோம். Quality of adjective-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
மித்ரன்: சொல்லுங்க பாட்டி.
பாட்டி: Adjective-ல் ஒரு typeதான் Quality of adjective. Let’s take an example.
Isai is a beautiful girl. இசை ஒரு அழகான பெண்.
இதுல, girl (பெண்) அப்படிங்கிறது noun. Beautiful என்பது அவள் எப்படிப்பட்ட பெண் அப்படிங்கிறதை காட்டுது.
இப்படி noun ஓட குணாதிசயத்தை ரொம்ப தெளிவா விளக்குறதை Quality of adjective அல்லது Descriptive adjective அப்படின்னு சொல்லுறோம்.
இசை: இதில் Beautiful என்பது adjective.
பாட்டி: இந்த example-ஐ எடுத்துக்கோங்க. Mithran is a brave boy. மித்ரன் ஒரு தைரியமான பையன். இதுல, boy அப்படிங்கிறது noun. எப்படிப்பட்ட பையன்னா, தைரியசாலியான (brave) பையன்.
உமையாள்: இதில் Brave என்பது adjective.
மித்ரன்: புரிஞ்ச மாதிரிதான் இருக்குது. examples கொடுங்களேன்.
பாட்டி: இந்த examples எல்லாம் பாருங்க. இப்போ நீங்களே எப்படி adjective இந்த இடத்தில் useful -ஆ இருக்குதுன்னு சொல்லிடுவீங்க.
Mahatma Gandhi is an ambitious leader. மகாத்மா காந்தி ஒரு லட்சியத் தலைவர்.
உமையாள்: மகாத்மா காந்தி ஒரு தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர்ன்னா, லட்சிய கொள்கை கொண்ட தலைவர். இதுல லட்சியம் (ambitious) என்பது adjective
பாட்டி: We had delicious dinner. நாங்கள் சுவையான இரவு உணவு சாப்பிட்டோம்.
இனியன்: இரவு உணவு (dinner) என்பது noun. அந்த உணவு எப்படி இருந்ததுன்னா, சுவையாக இருந்தது. இதுல சுவையாக (delicious) என்பது adjective.
பாட்டி: Delhi is a crowded city. டெல்லி மக்கள் கூட்டம் நிறைந்த நகரம்.
மித்ரன்: டெல்லி என்பது ஒரு நகரம். எப்படிப்பட்ட நகரம்ன்னா, மக்கள் கூட்டம் நிறைந்த நகரம். நகரம் (city) என்பது noun. கூட்டம் (crowded) என்பது adjective.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT