Published : 26 Sep 2022 06:08 AM
Last Updated : 26 Sep 2022 06:08 AM

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா? - மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

திருநெல்வேலி: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா?’ என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘விண்வெளிக் குப்பைகள் தணிக்கும் முறைகள்’ என்ற தலைப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

கட்டுரைகளை தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவிகளின் கையெழுத்தில் ஏ-4 அளவுள்ள தாளில் எழுதப்பட வேண்டும்.போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களின் பெயர், வயது, படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளி முகவரி, பெற்றோர் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியின் சார்பில் 2 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். இந்தகட்டுரை சம்பந்தப்பட்ட மாணவர்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டுரைகளை அக்டோபர் 15-ம்தேதிக்குள் ‘The Administrative Officer,IPRC, Mahendragiri P.O., Tirunelveli- 627133’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மேல் கட்டுரைப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக 3 பரிசுகள் அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடைபெறும் உலக விண்வெளி வார விழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04637- 281940, 281230, 9486041737 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இஸ்ரோவில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x