Published : 19 Sep 2022 06:06 AM
Last Updated : 19 Sep 2022 06:06 AM
சென்னை: பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை பிளஸ் 1 மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வு மூலம் 1500 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 கல்வி உதவித்தொகையாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் முதல் பெறப்பட்டன. தேர்வு அக்டோபர் 1-ல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இத்தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT