Published : 18 Nov 2021 04:43 PM
Last Updated : 18 Nov 2021 04:43 PM

18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்கள் கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பொது நூலக இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''2021 - 2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

இதனைச் செயல்படுத்தும் வகையில், பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில், கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியிலிருந்து சுய விவரப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து 31.12.2021க்குள் தங்களது படைப்புகளுடன்,
பொது நூலக இயக்ககம்,
737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002.
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
அல்லது dpltnservices@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் (அலைபேசி எண்: 99414 33630) என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு பொது நூலக இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x