Published : 01 Nov 2021 12:44 PM
Last Updated : 01 Nov 2021 12:44 PM

தீபாவளி; பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கருணைத் தொகை, முன்பணம் வழங்குக: ராமதாஸ் கோரிக்கை 

சென்னை

தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கருணைத் தொகை, முன்பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

''தமிழக அரசுப் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், தீப ஒளித் திருநாள் கொண்டாடப் பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குப் பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்குக் கருணைத் தொகை , முன்பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத் தொகை, முன்பணம் வழங்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x