Published : 21 Oct 2021 08:02 PM
Last Updated : 21 Oct 2021 08:02 PM
மத்தியப் பல்கலைக்கழகங்களில் குறைந்த கட்டணத்தில் சேர நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வான சியூசெட் 2021 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) நடத்தப்படுகிறது.
அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. 2021- 2022ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், 1,34,722 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 97,416 பேர் தேர்வெழுதினர். இந்தத் தேர்வு 2 இளங்கலை மற்றும் 58 முதுகலைப் படிப்புகளுக்காக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 161 நகரங்களில் 308 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள: https://ntaresults.nic.in/resultservices/CUCET-auth-21
மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை - 2020 வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT