Published : 20 Oct 2021 04:24 PM
Last Updated : 20 Oct 2021 04:24 PM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் புயம்பெயர்ந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அம்மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது.
தோப்பூர்- பண்ணையில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இக்கிராமத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவியரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தின் அருகில் உள்ள நூற்பு ஆலைகளில் அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களது பள்ளி வயதுக் குழந்தைகள் பள்ளி செல்லாமல் விளையாடி வந்தனர். இக்குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் பேசினார். மில்லுக்க்ர்ர் நேரடியாகச் சென்று பேசிய ஆசிரியர், அம்மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
அதையடுத்து, வெளிமாநிலக் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வட மாநிலங்களைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, இணையதளம் வழியே அவர்களுக்கு சேர்க்கையை உறுதி செய்து அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது. மேலும், அம்மாணவர்களுக்கு தனது சொந்தப் பணம் தலா ரூ.1000 ஊக்கத் தொகையை தலைமை ஆசிரியர் வழங்கினார். மேலும் அரிசி மற்றும் அரசின் இலவசப் புத்தங்களையும் தலைமை ஆசிரியர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT