Published : 28 Sep 2021 01:19 PM
Last Updated : 28 Sep 2021 01:19 PM
பிளஸ் 1 மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் 12-ம் வகுப்புக்கும் தேர்வின்றித் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. முந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 1 மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''மார்ச் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசியர் வழியாக 30.09.2021 அன்று பிற்பகல் 1 மணி முதல் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பம் இட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்''.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT