Published : 28 Sep 2021 12:43 PM
Last Updated : 28 Sep 2021 12:43 PM

பிளஸ் 2 துணைத் தேர்வு: அக்.4 முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் 

சென்னை

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள்களின் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேவைப்படும் மாணவர்கள் அக்.4 முதல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 01.10.2021 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் 05.10.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification-ஐ க்ளிக் செய்தவுடன் தோன்றும் HSE Second Year Supplementary Exam, Aug 2021 - Scripts Download” என்ற வாசகத்தை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Notification பக்கத்தில் “Application for Retotaling / Revaluation” என்ற தலைப்பை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 04.10.2021 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 05.10.2021 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு

பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-

மறுகூட்டல்-II

உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205''

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x