Published : 07 Sep 2021 07:09 PM
Last Updated : 07 Sep 2021 07:09 PM

10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு, தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு, தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வழியாக நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’நடைபெறவுள்ள செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 08.09.2021 (புதன்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும் முறை

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALLTICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 13.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே, இத்தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாட்களில் அவசியம் அணுகுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்யும் முறை

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “HSE FIRST YEAR SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 – HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x