Last Updated : 03 Sep, 2021 05:43 PM

1  

Published : 03 Sep 2021 05:43 PM
Last Updated : 03 Sep 2021 05:43 PM

ஜேஎன்யுவில் 'தீவிரவாத எதிர்ப்பு' படிப்புக்கு அனுமதியால் சர்ச்சை

புதுடெல்லி

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'தீவிரவாத எதிர்ப்பு' படிப்புக்கு நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

'தீவிரவாத எதிர்ப்பு', 'இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகப் பார்வை' மற்றும் 'சர்வதேச உறவுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்' ஆகிய பாடத்திட்டங்களுக்கு ஜேஎன்யு நிர்வாகக் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்த ஆண்டு புதிதாக 'தீவிரவாத எதிர்ப்பு', 'இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் சர்வதேசப் பார்வை', 'சர்வதேச உறவுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்' ஆகிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆண்டுதோறும் வெபினார்/ செமினார்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், தீவிரவாதச் செயல்பாடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மூலம் உண்மையான நிகழ்வுகளை மீண்டும் தெரிவித்தல் மற்றுல் பல செயல்பாடுகள் மூலம், தீவிரவாதத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் எவ்வாறு தங்களின் உயிரை இழந்தனர் என்பது குறித்து இளம் தலைமுறைக்குக் கற்பிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஜிஹாதி தீவிரவாதம், அடிப்படைவாத மதம்சார் தீவிரவாதத்துக்கே வழிவகுக்கும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

முன்னதாக பல்கலை. நிர்வாகக் குழு ஆகஸ்ட் 17-ம் தேதி நடத்திய சந்திப்பை அடுத்து, 3 புதிய படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x