Published : 13 Aug 2021 04:35 PM
Last Updated : 13 Aug 2021 04:35 PM
பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளம் வழியாக விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் Quick Link தலைப்பின் கீழ் உள்ள இணைப்பின் வாயிலாக ஓவியப் பேட்டி, வாசகப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் 13.082021 முதல் 15.08.2021 வரை நடைபெற உள்ளது.
தலைப்பு:- “தண்ணீரை வீணாக்க வேண்டாம்” “Let No water Go Waste”
1. ஓவியப் போட்டி (Drawing Competition)- 13 ஆகஸ்ட், 2021
2. வாசகப் போட்டி (Slogan Writing)- 14 ஆகஸ்ட், 2021
3. கட்டுரைப் போட்டி (Essay Writing) - 15 ஆகஸ்ட், 2021
போட்டிகளில் பங்குபெறும் மாணவ/ மாணவியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வாயிலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். மேலும், தங்களது படைப்புகளை Scan அல்லது புகைப்படம் எடுத்து 1 MB அளவிற்கு மிகாமல் PDF/GIF வடிவத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்கள் படைப்புகளில் தங்களின் பெயர், படிக்கும் வகுப்பு, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 3 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT