Published : 09 Aug 2021 04:34 PM
Last Updated : 09 Aug 2021 04:34 PM
ஐஐடி சென்னை வழங்கும் ஆன்லைன் தரவு அறிவியல் பாடத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசித் தேதியாகும்.
2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் படிப்பில், முதல் பிரிவில் இந்தியா முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த 8,154 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், 70-க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் துணைத் தலைவர்கள், இஸ்ரோ மற்றும் சிஎஸ்ஐஆர் பணியாளர்கள் மற்றும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் சேர்ந்து படிக்கின்றனர்.
2026ஆம் ஆண்டில் 11.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள, வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று தரவு அறிவியல் துறை.
இதன்கீழ் இந்த இணையவழிப் பட்டப்படிப்பு, தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது. அவை அடிப்படைப் பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme). இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் உண்டு என்பதுடன், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் கிடைக்கும்.
இந்நிலையில், ஐஐடி சென்னை வழங்கும் ஆன்லைன் பாடத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசித் தேதியாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT