Published : 31 Jul 2021 08:01 PM
Last Updated : 31 Jul 2021 08:01 PM
முதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பாராட்டினார்.
சிவகங்கை கல்லூரிச் சாலையைச் சேர்ந்த வீரபத்திரன். இவரது மகன் வீரகுரு ஹரிகிருஷ்ணன் (12). திருப்புவனம் வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் பள்ளிகள் திறக்காத நிலையில் வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தார்.
இந்நிலையில் சைக்கிள் ஓட்டச் சிரமப்படும் முதியோர்களுக்காக சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். மேலும் அந்த சைக்கிளை சூரிய ஒளி இல்லாத சமயத்தில் மின்சாரத்திலும் இயக்கலாம். சூரிய ஒளி இருக்கும்போது முழுமையாகவும், மின்சாரத்தை ரீசார்ஜ் செய்தால் 5 மணி நேரம் ஓட்ட முடியும். இந்த சைக்கிளை 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம். இந்த சைக்கிளை வடிவமைக்க வீரகுரு ஹரிகிருஷ்ணன் ரூ.10 ஆயிரம் செலவழித்துள்ளார்.
அவருக்கு உதவியாக சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் அவரது சகோதரர் சம்பத் கிருஷ்ணன் இருந்துள்ளார். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT