Published : 19 Jul 2021 01:22 PM
Last Updated : 19 Jul 2021 01:22 PM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அறிவியல், கலை எனப் பாடப்பிரிவு வாரியாகப் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரம் இதோ.
தமிழகத்தில் 37,459 அரசுப் பள்ளிகளும், 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,918 தனியார் பள்ளிகளும் உள்ளன. கரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதையடுத்து 10, பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,80,500 பேர் மாணவர்கள். 4,35,973 பேர் மாணவிகள் ஆவர்.
பொதுப் பிரிவில் 3,49,449 மாணவர்களும், 4,15,144 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தொழிற்பாடப் பிரிவில், 31,051 மாணவர்களும் 20,829 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு முதல் முறையாக மதிப்பெண்கள் முழு எண்களாக மாற்றப்பட்டு வழங்கப்படவில்லை. அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தசம எண்களாக உள்ளபட்சத்தில் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் பாடப் பிரிவு வாரியாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விகிதம்
மொத்தம் 600 மதிப்பெண்களுக்குத் தேர்வு முடிவுகள் கணக்கிடப்பட்ட நிலையில், 551- 600 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் 4.86 ஆகும். இதில், 12,374 பேர் மாணவர்கள், 27,305 பேர் மாணவிகள் என மொத்தம் 39,679 பேர் 550-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதில், அறிவியல் பாடப்பிரிவில் 6.6 சதவீதம் மாணவர்களும், வணிகப் பாடப்பிரிவில் 3.12 சதவீதம் மாணவர்களும், கலை பாடப்பிரிவில் 0.23 சதவீதம் மாணவர்களும், தொழிற் பாடப்பிரிவில் 0.26 சதவீதம் மாணவர்களும் 550-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதேபோல 551- 600 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் 4.86 ஆகும். இதில், 12,374 பேர் மாணவர்கள், 27,305 பேர் மாணவிகள் என மொத்தம் 39,679 பேர் 550-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
501.00 - 550.99 வரை மதிப்பெண் பெற்றவர்கள்
அடுத்ததாக 501.00 - 550.99 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் 19.98 ஆகும். இதில், 58,448 பேர் மாணவர்கள், 1,04,685 பேர் மாணவிகள் என மொத்தம் 1,63,133 பேர் 501.00-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்களில், 451.00 - 500.99 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் அதிகபட்சமாக 27.25 ஆக உள்ளது.
விரிவாகக் காண:
கல்வித்துறை வழங்கிய இந்த மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்திடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT