Published : 02 Jul 2021 01:41 PM
Last Updated : 02 Jul 2021 01:41 PM

உங்கள் குழந்தையின் அறிவியல் செயல்முறையில் ஆர்வம் காட்ட விரும்புகிறீர்களா?

நாட்டில் பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும் பரப்பவும் ஒரு தனித்துவமான வாய்ப்பைத் தருவதற்காக, தேசிய அளவில் தன்னார்வ அறிவியல் அமைப்பு (டிஒய்ஏயூ) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தனிப்பட்ட மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம்.

பள்ளி மாணவர்களுக்கான இந்தத் தன்னார்வ அறிவியல் அமைப்பு, நாடு முழுவதும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்களுடன் மாணவர்கள் நேரடியாகக் கலந்துரையாட ஒரு வாய்ப்பைத் தருகிறது.

மேலும் தேசிய அளவிலான வினாடி வினாக்களில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள், ஆண்டுதோறும் நடக்கும் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சிப் பட்டறைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மாணவர்கள் கற்கவும் தங்கள் தொலைநோக்கியைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது மாணவர்களின் அன்றாட அறிவியல் அறிவை மேம்படுத்தும்.

அத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடும் ஏற்படும் வகையில் பல்வேறு விஞ்ஞானிகளின் படைப்புகள் கொண்ட மாதாந்திர செய்தி மடலானது ஒவ்வொரு மாணவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் 3-வது ஞாயிற்றுக் கிழமை அன்று நேரடி இணைய வழிக் கலந்துரையாடல் காலை 11 மணிக்கு நடைபெறும்.

பிராந்திய மொழிகளில் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனையை வளர்ப்பது, ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை வளர்ப்பது, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை இதன் நோக்கம் ஆகும்.

பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் www.dyau.co.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

பதிவு செய்யக் கடைசித் தேதி: ஜூலை 18

கூடுதல் தகவல்களுக்கு: 8778201926

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x