Published : 28 Jun 2021 01:52 PM
Last Updated : 28 Jun 2021 01:52 PM

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி: எப்படி விண்ணப்பிப்பது?- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை

ஏழை மாணவர்கள் இலவசமாக உயர் கல்வி படிக்க எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த விவரங்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்புக் கல்வி ஆண்டில் (2021- 2022) இணைப்புக் கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதிக் கல்லூரிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த திட்டத்தின்கீழ் இலவசமாகப் படிக்க எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த விவரங்களை சென்னைப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, பதிவேற்றம் செய்யவேண்டிய சான்றிதழ்கள்:

* 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (கட்டாயம்)
* 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (கட்டாயம்)
* சமீபத்திய வருமானச் சான்றிதழ் (ஒரு வருடத்திற்குள்) வட்டாட்சியரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒப்புதல் சீட்டு (கட்டாயம்)
* மாற்றுத்திறனாளி சான்றிதழ் - மாற்றுத் திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்)
* ஆதரவற்ற மாணவர் சான்றிதழ் - ஆதரவற்ற இல்ல நிர்வாகியிடம் பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்)
* இறப்புச் சான்றிதழ் (பொருந்தினால்)
* முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் - வட்டாட்சியரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒப்புதல் சீட்டு (பொருந்தினால்)
* கணவரால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் - வட்டாட்சியரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்)

தேவைப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் கருப்பு - வெள்ளை நிறத்தில் ஸ்கேன் செய்து, 200 KB முதல் 300 KB அளவில் வைத்திருக்க வேண்டும்.

இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக, இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பிக்க: https://egovernance.unom.ac.in/cbcs2122/UnomFreeEducation/Frm_Eligiblity என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://egovernance.unom.ac.in/cbcs2122/UnomFreeEducation/login

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x