Published : 14 Jun 2021 04:24 PM
Last Updated : 14 Jun 2021 04:24 PM
கரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கலந்துகொள்கிறார்
கரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக, தற்போது உள்ள தடுப்பூசிகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றி நமக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் எழுந்திருக்கும். அவற்றுக்கு விடை அளிக்கும் வகையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இணையவழிக் கருத்தரங்கு நாளை (ஜூன் 15ஆம் தேதி) அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானியும் பேரிடர்க் காலகட்டத்தில் பல்வேறு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருபவருவான டாக்டர்.த.வி.வெங்கடேஸ்வரன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். தடுப்பூசிகள் பற்றிய உங்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் த.வி.வெங்கடேஸ்வரன் பதில் அளிக்க உள்ளார்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய https://forms.gle/4qu2u5wGznwxdcPU7 என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: 8778201926
இ-மெயில் முகவரி: galilioscienceclub@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT