Published : 02 Jun 2021 07:30 PM
Last Updated : 02 Jun 2021 07:30 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்துக் கருத்து தெரிவிக்கலாம்: தொலைபேசி எண், இமெயில் முகவரி வெளியீடு

கரோனா சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுத்தேர்வு குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, tnschooledu21@gmail.com என்ற இமெயில் முகவரியும், 14417 என்ற தொலைபேசி உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது குறித்த தங்களுடைய கருத்துகளை இரண்டு நாட்களுக்குள் பதிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x