Last Updated : 12 Apr, 2021 05:06 PM

 

Published : 12 Apr 2021 05:06 PM
Last Updated : 12 Apr 2021 05:06 PM

10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் பயோ மெட்ரிக் சான்றுகளை ஆதாரில் அப்டேட் செய்ய புதுவையில் இலவச முகாம்

புதுச்சேரி

ஆதார் அட்டையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பயோமெட்ரிக் சான்றுகளை அண்மைப்படுத்துதலுக்கான (update) இலவச முகாமுக்குப் புதுச்சேரி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பாண்டில் 10,11,12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆதார் அட்டையில் பயோ மெட்ரிக் சான்றுகளை அண்மைப்படுத்துதல் சேவை இலவசமாக நடக்கிறது. தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுமுறையிலும் ஐந்து மையங்களில் இப்பணியைச் செய்யலாம்.

இது தொடர்பாகப் புதுவை கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு கூறுகையில், "புதுச்சேரியில் படிக்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தகவல்களை அப்டேட் செய்யலாம். புதுச்சேரி இந்திரா நகர் அரசு தொடக்கப்பள்ளி வட்டார வள மையம், நோணாங்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி வட்டார வள மையம், வில்லியனூர் விவேகானந்தா அரசு மேனிலைப்பள்ளி வட்டார வள மையம், லாஸ்பேட்டை மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அண்ணாநகர் கல்வித்துறை இயக்ககம் பி பிளாக் 4-வது மாடி பயிற்சி அரங்கம் ஆகியவற்றில் இப்பணி நடக்கிறது.

15 வயது நிரம்பியோருக்கு இது இறுதி வாய்ப்பு. இம்முகாம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 முதல் மாலை 5 வரை வரும் கல்வியாண்டு தொடங்கும் நாள் வரை நடைபெறும். முகாமுக்கு வரும்போது தவறாமல் ஆதார் அட்டை நகலை எடுத்து வரவேண்டும். அடுத்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பயோ மெட்ரிக் சான்று அண்மைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x