Published : 18 Feb 2021 05:22 PM
Last Updated : 18 Feb 2021 05:22 PM
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 1 முதல் 8-ம் தேதி வரை சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறை மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. பயிலரங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிலரங்கில் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் என 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் காலை, மாலை தேநீரும், மதிய உணவும் வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் தங்குவதற்கான இட வசதியை அவர்களே சுயமாகச் செய்துகொள்ள வேண்டும். பயிலரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப் படி / நாள் படி வழங்கப்பட மாட்டாது.
சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர், பதிவுப் படிவ விண்ணப்பத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நேரிலோ அல்லது நிறுவன வலைதளத்தில் www.ulakaththamizh.in என்ற முகவரியிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் தேதி பிப்ரவரி 25 ஆகும்''.
இவ்வாறு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT