Published : 04 Feb 2021 12:21 PM
Last Updated : 04 Feb 2021 12:21 PM
தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் மே மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வில் மாணவர்களின் சுமைகளைக் குறைப்பதென தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வில் (10 ஆம் வகுப்பு) வினாத்தாள்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 11 முதல் ஆறாகக் குறைக்கப்படும். இவ்வகையில் நடப்பு கல்வியாண்டில் - 2020-21 ஆறு தாள்கள் முறை (ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தாள்) மட்டுமே இடம்பெறும்.
கல்வியாண்டின் பெரும்பகுதியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. கடந்த 2020 செப்டம்பர் முதல் ஆன்லைன் முறை மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வினாத்தாள் கேள்விகளுக்கும் கூடுதல் தேர்வு வழங்கப்படும்.
இதனை அடுத்து முன்னர் நிர்ணயிக்கப்பட்ட நேரம் அரை மணி நேரம், 2 மணி நேரம் 45 நிமிடங்களிலிருந்து 3 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்த்தப்படும்.
மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு இப்பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் 480 மற்றும் அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும் இன்டர்னல் தேர்வுகளில் 120 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு தெலங்கானா பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT