Last Updated : 26 Jan, 2021 04:01 PM

3  

Published : 26 Jan 2021 04:01 PM
Last Updated : 26 Jan 2021 04:01 PM

அரசு ஒதுக்கிய ரூ.1,044 கோடி எங்கே?- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேள்வி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு 2019- 20ஆம் ஆண்டுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,044 கோடி பணம் எங்கு சென்றது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி இன்றுடன் 49-வது நாளாகப் பல்வேறு நூதன முறைகளில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம், கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்து அடிப்படை வசதிகளையும் தடை செய்தது. இந்தச் சூழலில் கடந்த 25-ம் தேதி சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

மாணவர்கள் போராட்டக் களத்திலேயே உணவருந்தி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிதம்பர ரகசியங்களை இன்று (ஜன.26) வெளியிட உள்ளதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர். இதுகுறித்த போஸ்டர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் இன்று (ஜன.26), ''ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு 2019- 20ஆம் ஆண்டுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,044 கோடி பணம் எங்கு சென்றது? வைத்தியம் பார்க்க மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பணம் வாங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்த மாணவர்கள், ''இதுவே நாங்கள் தெரிவித்த இரண்டு சிதம்பர ரகசியங்கள். எங்களது போராட்டம் தொடரும்'' என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x