Published : 23 Jan 2021 12:41 PM
Last Updated : 23 Jan 2021 12:41 PM
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் இணைய வழியில் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான அறிவுரைகளை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்திய சுதந்திரத்துக்காவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இணையற்ற பங்களிப்பைத் தந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நினைவுகூரும் விதமாக , அவரின் பிறந்த நாளை (ஜன.23-ம் தேதி) ‘பராக்கிரம தினம்’ என்ற பெயரில் தேசிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓராண்டுக்கு இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
கரோனா பாதிப்பு காரணமாக இணைய வழியில் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காணொலி மூலம் நிகழ்ச்சிகளை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோலக் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தினர் என அனைவரும் கலந்துகொள்ளும் வகையில், நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
ஆன்லைன் கருத்தரங்குகள், வெபினார்கள் மற்றும் சைக்கிள், யோகா உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கைகளுடன் போஸ்டர் தயாரித்தல் போன்ற பிற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட நேதாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்களை யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள், 90 நிமிடங்களுக்கு உட்பட்ட காணொலிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் காணொலிகளை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #MyInspirationBoseji அல்லது #MeriPrernaBoseji என்ற ஹேஷ்டேகுடன் பகிர வேண்டும். மறக்காமல் மத்தியக் கல்வி அமைச்சரின் வலைதளக் கணக்கையும் டேக் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT