Last Updated : 22 Jan, 2021 05:35 PM

 

Published : 22 Jan 2021 05:35 PM
Last Updated : 22 Jan 2021 05:35 PM

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.63.86 கோடியில் 1.83 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் வேலுமணி தகவல்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.63.86 கோடியில், 1.83 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை, ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு 1,334 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.27 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

''இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள், பென்சில், கிரையான்ஸ், விலையில்லா சைக்கிள், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, காலணி, நான்கு சீருடைகள், வரைபடம், சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2011 முதல் 2020 வரை ரூ.63.86 கோடி மதிப்பீட்டில் 1,83,200 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் 6,961 மாணவர்களுக்கும், 10,271 மாணவிகளுக்கும் ரூ.6.78 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன''.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சித் துணை ஆணையர் மதுராந்தகி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x