Published : 21 Jan 2021 03:05 PM
Last Updated : 21 Jan 2021 03:05 PM

ஆடை அலங்காரம் படிக்க நிஃப்ட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி

மத்திய அரசின் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தும் நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜன.21) கடைசித் தேதி ஆகும்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) செயல்படுகிறது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகளைப் படிக்கலாம். ஐஐடியில் பொறியியல் படிப்பதற்கு இணையான படிப்புகள் இவை.

மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள 2,370 இடங்களுக்காக, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு 2021 பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23-க்கு உட்பட்டிருக்க வேண்டும்.

நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜன.21) கடைசித் தேதி என்று தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதல் கட்டணம் செலுத்தி ஜன.22 முதல் 24ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 25 முதல் 28ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிஃப்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க: applyadmission.net/nift2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x