Published : 16 Jan 2021 11:59 AM
Last Updated : 16 Jan 2021 11:59 AM
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்குப் பொருத்தமானவரைத் தேர்வு செய்ய, தேர்வுக் குழுவைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அமைத்துள்ளார்.
மத்திய அரசு ஒப்புதலுடன் புதுச்சேரி சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டப்படி புதுச்சேரி பொறியியல் கல்லூரி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக நடைமுறைக்கு வந்தது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்குப் பொருத்தமான நபரைத் தேர்வு செய்ய, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேர்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
தேர்வுக் குழுவில் டெல்லி ஐஐடி பேராசிரியர் ராமகோபால் ராவ் இயக்குநராகவும், உறுப்பினர்களாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஜகதீஷ் குமாரும், உயர் கல்வித்துறைச் செயலரும் இடம்பெற்றுள்ளனர். இத்தேர்வுக் குழுவானது தங்கள் பரிந்துரையை அளித்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT