Published : 08 Jan 2021 01:04 PM
Last Updated : 08 Jan 2021 01:04 PM

மதுரை எய்ம்ஸின் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஐஐடி சென்னை இயக்குநர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசின் பிரதிநிதியாக ஐஐடி சென்னையின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறையின் பொருளாதார ஆலோசகர் நிலம்புஜ் ஷரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2012-ன் படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் ஐஐடி சென்னை இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் பதவிக் காலம் இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இ-கெஸட் நாளிதழிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்வி தொடர்பான நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் பாஸ்கர் ராமமூர்த்தி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டில் இருந்து ஐஐடி சென்னையின் இயக்குநராக பாஸ்கர் ராமமூர்த்தி பணியாற்றி வருகிறார். சென்னையைச் சேர்ந்த இவர், ஐஐடி சென்னையில் 1980-ல் இளங்கலைப் படிப்பை முடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x