Published : 07 Jan 2021 02:21 PM
Last Updated : 07 Jan 2021 02:21 PM

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்குத் தொழில் வழிகாட்டல்: ஐஐடி சென்னை தொடக்கம்

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்குத் தொழில் மற்றும் வேலை குறித்து வழிகாட்டும் முன்னெடுப்பை ஐஐடி சென்னை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஐஐடி சென்னை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''ஐஐடி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா மூலம் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 'அவளால் முடியும்' என்ற பொருள்படும் வகையில் ‘She Can’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளுக்குத் தொழில் மற்றும் வேலை குறித்து வழிகாட்டப்படுகிறது. கற்றல், கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து 190 பள்ளி மாணவிகளும், 200 கல்லூரி மாணவிகளும் இதில் இதுவரை கலந்து கொண்டனர்.

அதேபோல அமைப்புசாராத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்குப் பொருளாதாரக் கற்றல் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் பணியாற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். 85 பெண்களுக்குத் தமிழ் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் கற்றல் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

பெருந்தொற்றுக் காலத்தில் இவை அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகிறது. வருங்காலத்தில் கூடுதலாக நிதிசார் துறைகள் குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டத் திட்டமிடப்பட்டு வருகிறது''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x