Published : 05 Jan 2021 08:03 AM
Last Updated : 05 Jan 2021 08:03 AM

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை; பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கலாமா?- 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் ஜன.8 வரை கருத்து கேட்பு கூட்டம்

சென்னை

தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்பு கூட்டம்நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அறிவித்ததற்கு இணங்க பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த நவ.16-ம் தேதிகருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்
டது. அதில் பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, பள்ளி திறப்பது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்
களின் கல்வி நலன் கருதி பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாகஅவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதும் அவசியமாகிறது.

எனவே, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர்கள், 10, 12-ம்வகுப்பு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, பொங்கல் முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பதுகுறித்தும், கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் ஜன.8 வரைகருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் நெரிசலை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு நேரங்களில் கூட்டத்தை முடித்து அனுப்ப வேண்டும்.

கூட்டம் நடைபெறும் அரங்கு,வகுப்பறைகள் ஆகியவை சுகாதாரமாக இருக்க கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். சமூக
இடைவெளியுடன் அமர இருக்கைகள் அமைக்க வேண்டும். பெற்றோர்கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளி நுழைவுவாயிலில் அவர்களை தெர்மல் ஸ்கேனரால் சோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும்.

பொங்கல் முடிந்து பள்ளிகளை திறப்பது குறித்தும், பள்ளிகளை திறக்கும்போது கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறை
களைப் பின்பற்றுவது குறித்தும்கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளை தொகுத்து, பள்ளி
தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளை திறப்பது குறித்துஅரசு முடிவெடுக்கும். இதை மனதில்கொண்டு, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு கூட்டத்தை நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிபள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை பார்வையிட ஏதுவாக தங்கள்மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆகியோரை ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x