Last Updated : 28 Dec, 2020 01:08 PM

 

Published : 28 Dec 2020 01:08 PM
Last Updated : 28 Dec 2020 01:08 PM

மாற்றுத்திறன் படிப்புகள் மற்றும் மறுவாழ்வு அறிவியல் பல்கலைக்கழகம்: மத்திய அரசு திட்டம்

மாற்றுத்திறன் படிப்புகள் மற்றும் மறுவாழ்வு அறிவியல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (DEPwD) சார்பில் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மத்திய மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, மசோதா அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அதில், மாற்றுத்திறன் படிப்புகள் மற்றும் மறுவாழ்வு அறிவியல் மசோதா 2021, புதிய பல்கலைக்கழகத்தை அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் அமைக்கப் பரிந்துரை செய்கிறது.

துறையின் பரிந்துரைப்படி, புதிய பல்கலைக்கழகத்தில் 8 பாடப்பிரிவுகள் இருக்கும். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மாற்றுத்திறன் படிப்புகள் மற்றும் மறுவாழ்வு அறிவியல் பிரிவில் இயங்கலாம்.

துறையால் முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறன் படிப்புகள், மறுவாழ்வு அறிவியல், ஆடியாலஜி மற்றும் பேச்சு மொழி மருத்துவம், சிறப்புக் கல்வி, உளவியல், நர்சிங், ஆர்த்தோடிக்ஸ் மற்றும் புரோஸ்தடிக்ஸ் மற்றும் உதவி தொழில்நுட்பம், உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய வடிவமைப்பு ஆகிய படிப்புகள் இருக்கும்.

இந்த மசோதா தொடர்பாகப் பொதுமக்கள் ஜனவரி 3, 2021 வரை தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x