Published : 18 Dec 2020 12:39 PM
Last Updated : 18 Dec 2020 12:39 PM
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிப்பதாக இருந்த நிகழ்வு டிச.22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு, ‘பொதுத் தேர்வை மே மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்’ என்று மாணவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர்களிடம் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் பொக்ரியால் அறிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிப்பதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,“சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன். இதையடுத்து டிச.22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேரலையில் கலந்து ஆலோசிக்க உள்ளேன்.
எனவே, பொதுத்தேர்வு தொடர்பான தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில்#Education Minister GoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT