Published : 16 Dec 2020 03:15 PM
Last Updated : 16 Dec 2020 03:15 PM

58 நிமிடங்களில் 46 விதமான உணவுகள்: கேரளச் சிறுமியின் சாதனையை முறியடித்த தமிழகச் சிறுமி

வெறும் 58 நிமிடங்களில் 46 விதமான உணவுகளைச் சமைத்து, கேரளச் சிறுமியின் சாதனையை தமிழகச் சிறுமி முறியடித்ததுடன் யுனிகோ எனப்படும் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் கலைமகள். அவரின் மகள் லட்சுமி சாய் ஸ்ரீ, கரோனா கால விடுமுறையால் வீட்டில் இருந்துள்ளார். சமையலில் ஆர்வம் கொண்ட அவர், தாயுடன் சேர்ந்து சமைக்க ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்துக் கலைமகள் கூறும்போது, ''நான் தமிழ்நாட்டின் விதவிதமான உணவுகளை வீட்டில் சமைப்பேன். ஊரடங்கால் மகள் லட்சுமி எனக்கு உதவிகரமாக இருந்தாள்.

அவளின் சமையல் ஆர்வம் குறித்துக் கணவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். உடனே அவர், இதை ஏன் உலக சாதனையாகச் செய்ய முயலக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். அப்படித்தான் இந்தத் திட்டம் உருவானது.

இணையத்தில் தேடிப் பார்த்தபோது கேரளச் சிறுமி சான்வியின் சாதனை குறித்து அறிந்தோம். அதை முறியடிக்கும் வகையில், லட்சுமி வெறும் 58 நிமிடங்களில் 46 விதமான உணவுகளைச் சமைத்து சாதனை படைத்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ கூறும்போது, ''என்னுடைய தாயிடம் இருந்து சமையலைக் கற்றுக் கொண்டேன். உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.

முன்னதாக ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, 10 வயதான கேரளச் சிறுமி சான்வி பிரஜித் உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x