Published : 10 Dec 2020 06:12 PM
Last Updated : 10 Dec 2020 06:12 PM

பி.எட். சேர்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் (பி.எட்.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு டிச.4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

தொலைபேசி எண்கள்: 044-2235 1014, 044-2235 1015 மற்றும் 044-2827 8791.

கூடுதல் விவரங்களுக்கு: www.tngasaedu.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x