Published : 04 Dec 2020 04:21 PM
Last Updated : 04 Dec 2020 04:21 PM
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற கோவை வீரர்களுக்கு ரூ.66.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம், கடந்த 2018-19 ஆம் ஆண்டு நடத்திய 64-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாடிய 44 கோவை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
அவர்களுக்குத் தமிழக அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 44 பேருக்கு ரூ.66.50 லட்சம் ஊக்கத் தொகையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
அதன் விவரம்:
தடகள வீரர் சதீஷ்குமார், கேரம் வீரர் சந்தீப், செஸ் வீரர் ஹர்ஷாத், கைப்பந்து வீரர்கள் ரிஜித் கண்ணா, நந்தகோபால், பிரவீன்குமார், சிலம்பாட்ட வீராங்கனை நேகா, பூப்பந்து வீராங்கனைகள் வைஷ்ணுதேவி, சௌபர்ணிகா, ரச்சனா பிரியா, சிவரஞ்சனி, சைக்கிளிங் வீராங்கனை வர்ஷினி, டென்னிஸ் வீராங்கனை அஜிதா, தடகள வீராங்கனை விஸ்ருதா ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
பீச் வாலிபால் வீரர் நந்தகோபால், செஸ் வீரர் ரத்தினவேல், டேபிள் டென்னிஸ் வீரர் நந்தேஷ், பூப்பந்து வீராங்கனை சிவரஞ்சனி, சைக்கிளிங் வீராங்கனை பூஜா ஸ்வேதா, கைப்பந்து வீராங்கனை சரண்யாஸ்ரீ, தடகள வீராங்கனை தெரசா கிரேஸ் மெகல், கராத்தே வீராங்கனை அனுஷா ஆகியோர் தலா ரூ.1.5 லட்சத்துக்கான காசோலை பெற்றுக் கொண்டனர்.
குத்துச்சண்டை வீரர் அஸ்வின் ரமேஷ், சைக்கிளிங் வீரர்கள் மைக்கேல் ஜான்சன், கேசவராஜ், தர்ஷின், கராத்தே வீரர்கள் ஹரிமாறன், பிரசன்னகுமார், அஸ்வின், டென்னிஸ் வீரர் பூபதி, சாஃப்ட் டென்னிஸ் வீரர்கள் கார்த்திகேயன், ஸ்டீபன்ராஜ், அஜித்குமார், ஊசூ வீரர் அஜித், செஸ் வீராங்கனை ஷாலினி, தடகள வீராங்கனை தனுஷியா, ஒலிபா ஸ்டெஃபி, விகாஷினி, ரோல் பால் வீராங்கனைகள் நேகா ஷாரிக், ஸ்மிதா, தீக்சனா ஸ்ரீ, பிரியதர்ஷினி, கீர்த்தி மாலினி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. நீச்சல் போட்டியில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வென்ற பாவிகா துகாருக்கு ரூ.6.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT