Published : 28 Nov 2020 02:42 PM
Last Updated : 28 Nov 2020 02:42 PM
தொழிற்கல்விப் படிப்புகள் குறித்த பார்வையைச் சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று டெல்லி கல்வித் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் தொழிற்கல்வி பயிலும் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் டெல்லி துணை முதல்வரும் அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
''பள்ளிகளில் உள்ள தொழிற்கல்விப் பாடங்கள் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளாக மாறும் சூழலில், இவற்றுக்கான மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயரும். இந்த மாற்றம் மாணவர்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும்.
தொழிற்கல்விப் படிப்புகள் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் அளிக்கும். வருங்காலத்தில் திறன் மற்றும் தொழில் முனைவோர் பல்கலைக்கழகம் மூலம் டெல்லியில் தொழிற்கல்விப் படிப்புகள், கல்வியின் இரண்டாம்கட்ட இடமாகக் கருதப்படாத நிலை உருவாக்கப்படும்.
தொழிற்கல்விப் படிப்புகள் செயல்வழிக் கற்றலாக மாற்றப்பட்டு பிறர் மதிக்கக்கூடிய ஒன்றாகவும் வேலைவாய்ப்பு சார்ந்ததாகவும் மாற்றப்படும்.''
இவ்வாறு டெல்லி துணை முதல்வரும் அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT